வியத்தகு வேதியியல்: தவறான இணையைக் கண்டறியுங்கள்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு இணைகளில் மூன்று சரியான இணைகளும், ஒரு தவறான இணையும் இருக்கும். நீங்கள் தவறான இணையைக் கண்டறிய வேண்டும்.1. வேதியியல் பெயர்களில் தவறான இணை எது?அ. ரொட்டிச் சோடா (Baking Soda) - NaHCOஆ. சலவைச் சோடா (Washing Soda) - COஇ. சலவைத்தூள் (Bleaching Powder) - CaOClஈ. சுட்ட சுண்ணாம்பு (Quicklime) - CaCO32. அலோகங்களின் (Non-metals) இயற்பியல் பண்புகளில் தவறான இணை எது?வைரம் - கடினமான அலோகம்புரோமின் - திண்ம நிலை அலோகம்அயோடின் - பளபளப்பான அலோகம்கிராஃபைட் - மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்3. வாயுக்களின் முக்கியப் பண்புகளின் அடிப்படையில் தவறான இணை எது?கார்பன் டை ஆக்சைடு - தீயை அணைக்கும் பண்புஆக்சிஜன் - சூரியனின் முதன்மை எரிபொருள்குளோரின் - கிருமி நாசினியாக (நீர் சுத்திகரிப்பு)நைட்ரஜன் - உணவுப் பொருட்களைப் பதப்படுத்தல்4. அமிலங்கள் நிறைந்துள்ள பொருட்களின் அடிப்படையில் தவறான இணையைக் காண்க.தக்காளி - சிட்ரிக் அமிலம்தயிர் - லாக்டிக் அமிலம்வினிகர் - அசிட்டிக் அமிலம்ஆப்பிள் - மாலிக் அமிலம் விடைகள்:1. ஈ, சுட்ட சுண்ணாம்பின் வேதியியல் குறியீடு - CaO.2. ஆ, புரோமின், திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம்.3. ஆ, சூரியனின் முதன்மை எரிபொருள் - ஹீலியம், ஹைட்ரஜன்.4. அ, தக்காளியில் ஆக்ஸாலிக் அமிலமே உள்ளது.