உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் அக்கறை உள்ளவரா நீங்கள்?

நாம் வாழும் சூழலைத் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. இயற்கையையும், சூழலையும் பாதுகாப்பது என்பது அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்ல; நம்மை நாமே பாதுகாத்துக் கொள்கிறோம் என்பதே அதன் உண்மையான பொருள். இயற்கை விலைமதிக்க முடியாதது. அதன் ஆற்றலை உபயோகித்து வாழ்கிற நாம், அதைப் பாதுகாப்பதில் அலட்சியமாக இருக்கிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது அவசியம். நாம் சுற்றுச்சூழல் குறித்த அடிப்படைப் பொறுப்புணர்வுடன் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்ள எளிய சோதனை.* தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள, கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். * ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. * உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை டிக் செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்). * உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. * மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். * அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.1) சிக்னலில் நிற்கும் ஆட்டோவிலிருந்து கரும் புகை வெளிவந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வீர்கள்?அ) அந்த ஓட்டுனரிடம் கூறி வாகனத்தை சரிசெய்து கொள்ளச் செய்வேன். ஆ) பிறர் வாகனங்களைப் பற்றி நாம் கருத்து கூற முடியுமா? என் வீட்டு வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசு செய்யாதபடி பார்த்துக் கொள்வேன். இ) கரும் புகையெல்லாம் ஒரு பெரிய விஷயமா?2) வீட்டில் குப்பை போடும் பழக்கம் உண்டா?அ) ஆமாம். வீட்டில் குப்பையை எங்கு வேண்டுமானாலும் போட்டு விடுகிறேன். ஆ) வீட்டிலுள்ள குப்பைத் தொட்டியில் மட்டும்தான் போடுவேன். பிறகு தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் அவற்றைக் கொட்டி விடுவோம். இ) வீட்டுக் குப்பையை எல்லாம் தெருவில் கொட்டி விடுவேன். 3) மூன்று தெரு தள்ளியிருக்கும் கடைக்குச் செல்ல வேண்டும். உங்கள் வீட்டில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் (Bike) இரண்டும் இருக்கிறது. இரண்டையும் உங்களுக்கு ஓட்டத் தெரியும். என்ன செய்வீர்கள்?அ) இதென்ன கேள்வி? 'பைக்'கில்தான் சென்று வருவேன். ஆ) 'பைக்'கில் கடைக்குச் செல்வதுடன், அதிகப்படியாகவும் இரண்டு மூன்று ரவுண்டுகள் அடிப்பேன். இ) நடந்து செல்வேன் அல்லது சைக்கிளில் செல்வேன்.4) விருந்தில் மினரல் வாட்டர் பாட்டில் வைக்கிறார்கள். பாதிதான் குடிக்க முடிந்தது. என்ன செய்வீர்கள்?அ) அந்தப் பாட்டிலை அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுவேன். ஆ) மீதி பாட்டிலை வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவேன். இ) பாட்டிலைத் திறக்கவே இல்லையென்றால், வீட்டுக்குக் கொண்டு வருவேன். பாதி குடித்திருந்தால் அங்கேயே வைத்துவிடுவேன். 5) பல பொருட்களை வாங்குவற்காக ஒரு பெரிய கடைக்குச் செல்கிறீர்கள்? பொருட்களை எப்படி வாங்கி வருவீர்கள்?அ) கடைக்காரர் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளில்தான். ஆ) கையோடு எடுத்துச் செல்லும் துணிப்பையில்தான். இ) கடைக்காரர் தான் வழங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு காசு வாங்கினால் வேண்டாம் என்பேன். இல்லையென்றால், பிளாஸ்டிக் பைகளை அனுமதிப்பேன். 6) வீட்டைச் சுற்றி இடம் இருந்தால் அங்கு மரம் வளர்க்க முயற்சிப்பீர்களா?அ) நிச்சயம். ஆ) வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்தால் நான் குறுக்கே நிற்க மாட்டேன். இ) அதெல்லாம் எதற்கு? புழு, பூச்சி எல்லாம் வரும். விடைகள்அ ஆ இ 1) 8 4 02) 0 8 43) 4 0 84) 0 8 45) 0 8 46) 8 4 0* உங்கள் மொத்த மதிப்பெண் 40 லிருந்து 48 வரை என்றால், சுற்றுச்சூழலுக்கு உரிய மதிப்பளிக்கிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் இதுபோலச் செய்யச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினால், உங்களுக்கும் நல்லது; உலகிற்கும் நல்லது. * உங்கள் மொத்த மதிப்பெண் 20 லிருந்து 39 வரை என்றால், சுற்றுச்சூழலின் அருமையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். ஆனால், கடைப்பிடிப்பதில் கொஞ்சம் ஏனோ, தானோ என்றிருக்கிறீர்கள். இந்த வழக்கத்தை மாற்றிக்கொள்ளவும். * உங்கள் மொத்த மதிப்பெண் 20 க்கும் குறைவு என்றால், நமக்கு ஆதாரமான இந்த உலகைப் பாதுகாக்காமல் விடுவதோடு, சீரழிக்கும் வேலையையும் செய்கிறீர்கள். மாறுங்கள். பின்னர் வருத்தப்பட்டுப் பலனில்லை. - ஆருத்ரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !