அரை இறுதிக்கு வந்தாச்சு
மலேசியா, ஜன. 23 - மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரி கோல்டு பாட்மிண்டனில் பி.வி.சிந்து 21-13, 13- 21,21- 14 என்ற கணக்கில் ஜப்பானின் ஹாரி இமாபெப்புவை வென்றார். ஸ்ரீகாந்த் 21-17, 21 -10 என்ற கணக்கில் தாய்லாந்தின் பொன்ஷானாவை வென்றார். இந்த வெற்றிகள் மூலம் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்திய ஆட்டக்காரர்கள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.