உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. நம் தலையில் உள்ள முடி எத்தனை முறை விழுந்து முளைக்கும்?க. வீரக்குமார், 4ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி, போடிநாயக்கனூர்.கரோட்டின் புரதத்தால் ஆன புரத இழைகளே முடி. இவை மயிர்க்கால்களில் (Follicle) உருவாகி வெளியே வருகின்றன. தலையில் சுமார் லட்சம் முடிகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இதில் 100 - 150 முடிகள் உதிர்வது இயல்பு. தினமும் சராசரியாக அரை மி.மீ. நீளத்துக்கு முடி வளரும்.முடிவளர்ச்சி 3 கட்டங்களைக் கொண்டதுமுதல் கட்டம் : அனாஜன் (Anagen) 2 முதல் 7 ஆண்டுகள் வரை இந்த வளர்ச்சி இருக்கும். ஒவ்வொரு மயிர்க்காலில் இருந்தும் வெவ்வேறு வேகத்தில் வெவ்வேறு தடிமனில் முடி வளரும்.இரண்டாம் கட்டம் : காட்டஜன் (Catagen) அடிப்பகுதி முடி, மயிர்க்கால்களின் குழாயில் ஒட்டிக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக புதிய முடியை உருவாக்கும் செல்களிலிருந்து தனிமைப்படும். சுமார் 2 வாரங்கள் வரை நீடிக்கும் இந்தக் கட்டத்தில் உயிர்ப்பிழந்த முடிகள் உதிரும். மூன்றாவது கட்டம் : டீலாஜன் (Telogen) சுமார் 2 முதல் 4 மாதங்கள் நீடிக்கும் இந்தக் கட்டத்துக்குப் பிறகு உதிர்ந்த மயிர்க்கால்களில் மறுபடி முடி வளரத் தொடங்கும். இவ்வாறு சுழற்சி முறையில் முடி வளர்ச்சி ஏற்படும். செல்கள் வளர்வதும் முதிர்வதும் மடிவதும் புதிய செல்கள் உருவாவதும்தான் உயிர்ப்பு. மூப்பு அடையும்போது புதிய செல்கள் பிறக்கத் தாமதம் ஏற்படுவதால் முளைப்பதில்லை. ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும்.சராசரியாக இந்த 3 கட்டங்களும் 5 வருட நீட்சி கொண்டது எனக் கொண்டால், 50 வயதில் 10 முறை முடி கொட்டி வளர்ந்து, இருக்கும் என மதிப்பீடு செய்யலாம். 2. கருவில் உள்ள குழந்தைக்கு எந்தெந்த உறுப்புகள் முதலில் உருவாகும்? அதை வரிசைப்படுத்த முடியுமா?ஜெ.ரோகித், 4ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.தாயின் கருமுட்டையில் பாதி டி.என்.ஏ. மட்டுமே இருக்கும். தந்தையின் விந்துவுடன் சேரும்போது முழுமையடைந்து கரு உருவாகும். முதலில் உருவாகும் கரு ஒரே ஒரு செல்தான்! இந்த செல் பல்கிப் பெருகி உருவாவதை 'கருச்செனிப்பு' (Embryogenesis) என்கிறார்கள். குழந்தை பிறக்கும்வரை எல்லா உறுப்புகளும் வளர்ச்சி அடைந்த வண்ணமே இருக்கும். கீழே உள்ள பட்டியல் தோராயமான வளர்ச்சி படிநிலைகளைச் சுட்டுகிறது.முதல் நாள்: கரு சூல் கொள்ளும்6வது நாள்: சூல் கொள்ளும் கரு தாயின் கருப்பையில் ஒட்டிக் கொள்ளும்22வது நாள்: கருவின் இதயத் துடிப்பும் ரத்த ஓட்டமும் தொடங்கும்வாரம் 3: முதுகெலும்பு, தண்டுவடம், நரம்புகள் உருவாகும்வாரம் 4: சூல் கொண்ட கரு 10,000 மடங்கு பெரிதாகி இருக்கும் வாரம் 5: கண்கள், கால்கள், கைகள் உருவாகும்வாரம் 6: மூளை இயக்க அலைகள், வாய் இதழ்கள், நகம் உருவாகும்வாரம் 7: கண் இமை, விரல்கள், மூக்கு முதலியன முழுமையாக உருவாகும். இப்போது குழந்தை கை, கால்களை உதைக்கும் வாரம் 8: குருத்தெலும்பு எலும்பாக மாறும். எல்லா உறுப்புகளும் உருவாகிவிட்ட நிலையைக் கரு அடையும்வாரம் 9: குழந்தைக்குச் சில சமயம் விக்கல் வரும். பற்கள் உருவாகத் தொடங்கும். நகம் வளரும்வாரம் 10: தாயின் பனிக்குட நீரை சுவாசம் செய்யும். சிறுநீர் கழிக்கும்வாரம் 11: கையால் பொருள்களைப் பிடிக்க முடியும். ரத்த ஓட்டம் போன்ற பல உடலிய ஓட்டங்கள் செயல்படத் தொடங்கும்வாரம் 12: நரம்புகள் உருவாகி இருப்பதால் வலி போன்ற உணர்வுகளைக் குழந்தையால் உணரமுடியும்15 வாரம்: நாக்கில் உணர்விகள் உருவாகும்17 வாரம்: விரைவிழிவியக்க (Rapid Eye Movement) உறக்கம் கொள்ளும் 20 வாரம்: தாயின் குரலை உணர்ந்து பிரித்தறியும்26-28 வாரம்: வளருந்துவரும் நுரையீரலைப் பயன்படுத்தும். எண்ணெய்ச் சுரப்பிகள் வேலை செய்யும். கருப்பையில் உருளும். 30-32 வாரம்: கண்களை மூடித் திறக்கும். பார்த்தல், கேட்டல், சுவை, தொடு உணர்வுகளைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருக்கும். முகர்தல் இருக்காது. 3. எந்தக் கருவிகளும் இல்லாமல் பண்டைய இந்தியர்கள் எவ்வாறு சூரிய, சந்திர கிரகணங்களைத் துல்லியமாகக் கணித்தனர்?வி. சந்தானகோபாலன், மதுரை.பண்டைய இந்தியர்கள் மட்டுமல்ல சீனர்கள், எகிப்தியர்கள், மெசபடோமியா, தென் அமெரிக்க பழங்குடியினர் என, குறிப்பிடத்தகுந்த பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் கிரகண கணிதத்தில் முன்னேற்றம் அடைந்தவர்களாகவே இருந்தனர். பூமியின் நிழல் நிலவில் விழுவதே சந்திர கிரகணம். அதாவது சூரியன், பூமி, நிலவு ஆகியவை நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமி சூரியனைச் சுற்றும் பாதை 'சூரிய வீதி' எனப்படும். பூமியை நிலவு சுற்றிவரும் பாதை சூரிய வீதிக்கு சுமார் 5 டிகிரி சாய்ந்து உள்ளது. எனவே நிலவின் பாதை சூரிய வீதியில் இரண்டு புள்ளிகளில் மட்டுமே வெட்டும். சரியாக அந்தப் புள்ளிக்கு நேராக சூரியனும் அந்தப் புள்ளியில் நிலவும் வந்தால் சந்திர கிரகணம் தோன்றும். அந்த வெட்டு, புள்ளியில் இல்லாமல் வேறு எங்காவது இருந்தால் சரியாக நேர்கோட்டில் அமையாது. கிரகணமும் ஏற்படாது. பண்டைய இந்திய வானியலாளர்கள் Y வடிவில் அமைந்த யஸ்தி யந்திரம் (Yasti Yantra) போன்ற கருவிகளைக் கொண்டு கோணங்களை அளந்தனர். இதன் வழி 6,585.3 நாட்களுக்குப் பிறகு இன்றுள்ள அதே நிலையை சூரியனும் நிலவும் அடையும் எனக் கண்டனர். அதாவது இன்று கிரகணம் ஏற்பட்டால் அதேபோல அடுத்த 6,585.3 நாட்களுக்கு பிறகு ஏற்படும். ஒவ்வொரு கிரகணத்துக்கும் அடுத்த 6,585.3 நாட்களுக்குப் பிறகு கிரகணம் ஏற்படும் என்பதால் கிரகண வரிசைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலமாக வருங்காலத்தில் நிகழும் கிரகணத்தை முன்கூட்டியே கணிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !