விழிப்புணர்வு ஏற்படுத்தும் மேஜிக் காவலர்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரா பகுதி காவல் நிலைய துணைஆய்வாளர் சுதீஷ். இவர் ஒரு மேஜிக் நிபுணர். 2006இல் ஒரு முறை நகருக்குள் கண்களைக் கட்டிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி, மக்களைப் பிரமிக்க வைத்தார். இவர் ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞரும்கூட. மாணவர்களிடையே மரங்களின் அவசியம், காட்டுயிரிகளின் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு, நூல்வாசிப்பு விழிப்புணர்வு எனப் பல்வேறு சமூக விழிப்புணர்வுப் பணிகளை, தனது மேஜிக் நிகழ்வுகளின் மூலம் பரப்பி வருகிறார் சுதீஷ்.