வௌ்ளை இலை!
சமைத்துண்ணும் இலைகள் கீரை வகையில் சேரும். ஆனால் முட்டைகோஸ் (Cabbage) இலைவகையைச் சேர்ந்தது என்றாலும் அதை காய் என்றே அழைக்கிறோம்.இதன் பூர்வீகம் வடக்கு சீனா என்றும், ஐரோப்பா என்றும் சொல்லப்படுகிறது. கி.மு. 4000ஆம் ஆண்டிலேயே வடக்கு சீனாவில் பயிரிட்டிருக்கிறார்கள்.மேற்கு ஐரோப்பாவில் முட்டை வடிவில் இல்லாமல் இலை இலையாக உள்ளதைத்தான் வளர்த்தார்கள். அப்படித்தான் விளைந்தது. பிறகு முட்டை வடிவில் 14 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உற்பத்தி செய்தார்கள். ஐரோப்பாவிலிருந்து ஆசியா, அமெரிக்கா நாடுகளுக்குப் பரவியது.முட்டைகோஸை 14ல் இருந்து 17ஆவது நூற்றாண்டுகளின் இடையில் வியாபாரிகளாக வந்த போர்ச்சுகல் நாட்டினர், இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். ஊதா, வெள்ளை, பச்சை வண்ணங்களில் விளைகிறது முட்டைகோஸ்.மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் (anti oxidant) இதில் உள்ளது. 100 கிராம் முட்டைகோஸில் 36.6 மி.கி. வைட்டமின் சி இருக்கிறது. வைட்டமின் கே உள்ளதால், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.