அழகு ஆங்கிலம்: மாற்றுச் சொல் அறிவோம்
'முக்கியமான' என்று சொல்ல வேண்டிய இடங்களில் ஆங்கிலத்தில் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவோம்? Important என்று எழுதுவோம், பேசுவோம். எல்லா இடங்களுக்கும் இந்த important மட்டுமே போதுமா? இல்லை. இன்னும் கொஞ்சம் நயமான இங்கிலீஷ் பயன்படுத்தலாம். Important என்பதற்குப் பதிலாக, எந்தெந்த இடங்களில் வேறு எந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ள சொற்றொடர்களில் important வரும் இடங்களில் அதற்கு மாற்றான சொற்களை எழுதுங்கள். நீங்கள் எழுதியவற்றைச் சரிபார்த்துக்கொள்ள விடைகள் பகுதிக்குப் போகலாம். 1. An important meeting. 2. An important decision. 3. An important information. 4. An important person. 5. An important step. 6. An important moment. 7. An important skill. விடை:1. Crucial 2. Pivotal 3. Essential4. Influential 5. Critical6. Defining 7. Indispensable