உள்ளூர் செய்திகள்

மரங்களை நகர்த்தலாம்

ஒரு மரத்தை வேருடன் இடம் மாற்றி வைக்கும் தொழில்நுட்பம் மேலைநாடுகளில் பிரபலம். இப்போது நம் நாட்டிலும் வந்துவிட்டது. ஐதராபாத்தை சேர்ந்த உதயகிருஷ்ணா என்பவர், வாதா அறக்கட்டளை (Vata Foundation) மூலம் இப்பணிகளைச் செய்கிறார்.நன்கு வளர்ந்த பெரிய மரங்களைக்கூட ஓரிடத்தில் இருந்து பெயர்த்து மற்றொரு இடத்துக்கு நகர்த்தி, நட்டு வளர்க்கிறார்கள். பெரும்பாலும் மரங்கள் புது இடத்திலும் பிழைத்துக்கொள்கின்றன. ஐதராபாத்தின் ஒரு சாலை விரிவாக்கப் பணியில், 300 சாலையோர மரங்கள் வெட்டப்படக் காத்திருந்தன. ஆனால் வாதா அமைப்பினர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, அம்மரங்களைப் பெயர்த்தெடுத்து சாலையை இரண்டாகப் பிரிக்கும் பகுதியில் வழக்கமான செடிகளுக்குப் பதிலாக நட்டு காப்பாற்றிவிட்டனர். பசுமையை அழிக்காமலும் நகரமயமாக்கல் நடக்க முடியும் என்பதற்கு இச்சம்பவம் மிகச்சிறந்த உதாரணம். இப்போது ஆந்திர மாநிலம் முழுவதிலுமிருந்து மரங்களைக் காப்பாற்ற அழைப்புகள் வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான மரங்களை இடம் மாற்றி காப்பாற்றியுள்ளனர் இந்த அமைப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !