தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டாசுடன் கொண்டாட்டம்!
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் வியாஸ். இவரது மகன் ஆயுஷ் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தார் ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ஊர் மக்கள் மற்றும் உறவினர்களை அழைத்து விருந்து ஏற்பாடு செய்தார் வியாஸ். ''தேர்வில் தோல்வியடைந்தால், எல்லாம் முடிந்துவிட்டது போல் மாணவர்கள் ஒரேயடியாகச் சோர்ந்து விடுகின்றனர். வாழ்க்கை எனும் வகுப்பில், இன்னும் எத்தனையோ தேர்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. வெற்றி தோல்வியல்ல, முயற்சிதான் முக்கியம் என்பதை உணர்த்தவே விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்'' என்றார்.