உள்ளூர் செய்திகள்

பாண்டா கரடிக்காக இரயில் விட்ட சீனா!

சீனாவின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான பாண்டா கரடிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிரத்யேக இரயிலை சீனா வடிவமைத்துள்ளது.சீனாவின் செங்க்டு (Chengdu) மாகாணத்தில், இயக்கப்படும் இந்த மெட்ரோ இரயிலின் முகப்பு, ஜன்னல்கள், இருக்கைகள், கைப்பிடிகள் என அனைத்தும் பாண்டா கரடி வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இரயிலின் உள்ளேயும் நிறைய பாண்டா கரடி பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.இம்மாதக் கடைசி வரை அங்கு நடைபெறவிருக்கும் சுற்றுலா திருவிழாவிற்காக இந்த சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயிலில் பயணிப்போரை மகிழ்விக்க, திபேத்திய மற்றும் கியாங் பாரம்பரிய உடை அணிந்த குழுவினர், பாண்டா கரடிகளை மையப்படுத்திய நிகழ்வுகளை அரங்கேற்ற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !