உள்ளூர் செய்திகள்

தேனீ இங்கே வா நீ - 9ஆம் வகுப்பு அறிவியல்

தேனீக்கள் என்பவை பறக்கும் பூச்சிகள். குளவி இனமும் எறும்பு இனமும் மிக நெருங்கிய சொந்தம்! இவை பூக்களில் உள்ள தேனையும் மகரந்தத்தையும் உண்டு வாழ்பவை. ஒரு கண்டத்தில் மட்டும் தேனீக்களையே நீங்கள் பார்க்க முடியாது. அது அன்டார்ட்டிகா கண்டம்! எல்லா வகையான தேனீக்களும் தேன் சேகரிக்குமா?இல்லை. Eastern carpenter bee (ஈஸ்டர்ன் கார்பென்டர் பீ), Alfalfa leaf cutter bee (அல்ஃபால்ஃபா லீஃப் கட்டர் பீ), Orchard mason bee (ஆர்ச்சர்டு மேசன் பீ), Hornfaced bee (ஹார்ன்ஃபேஸ்டு பீ) போன்ற வகைகளைச் சேர்ந்த தேனீக்களை, தனிமைத் தேனீக்கள் என்று சொல்லலாம். ஆயிரக்கணக்கான மற்ற தேனீக்கள் வாழும் தேன்கூடுகளில் இவை வாழ்வதில்லை. தனியாக வசிக்கும். இவை இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இந்த வகைத் தேனீக்கள், தேன் மெழுகை உற்பத்தி செய்யாது. தேன் சேகரிக்காது. தேனீக்களில் உள்ள மொத்த வகைகள் 20,000உங்கள் தோட்டத்துக்கு அதிக எண்ணிக்கையில் தேனீக்கள் வர வேண்டுமா? ஏதேனும் ஒரு காட்டுப் பூச்செடியை வைத்துப் பராமரியுங்கள். ஒரு விஷயம், உங்கள் தோட்டத்தில் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தாதீர்கள். தேனீக்களுக்கு அவை பிடிக்காது. தேனீக்கள் ஏன் தேன் சேகரிக்கின்றன?தேன் கூட்டில் ஒரு சமூகமாக வாழும் மொத்தத் தேனீக்களும் சாப்பிடுவதற்காக, உழைப்பாளித் தேனீக்கள், தேனையும் மகரந்தத்தையும் சேகரிக்கின்றன. மலருக்கு மலர் தாவி, தேனீக்கள் தேன் சேகரிப்பது, மகரந்தச் சேர்க்கை நடக்க உதவுகிறது. உழைப்பாளித் தேனீயின் வயிற்றுக்குள் தேன்பொருள் 'நெக்டர்' (Nectar) இருக்கும். நெக்டரும், பூந்தேனும் சேர்வதாலேயே தேன் கெட்டுப்போகாத தன்மை அடைகிறது. பிறகு, அதை உழைப்பாளித் தேனீக்கள், தேன்கூட்டில் சேமிக்கும். தேனீயை இனம் காண்போம்!அடுத்த முறை தோட்டத்துக்குப் போக வாய்ப்புக் கிடைத்தால், தேனீக்கள் வருகின்றனவா என்று ஆசையாகப் பார்ப்பாய், இல்லையா? ரீங்காரம் இடும் தேனீ, உழைப்பாளித் தேனீ, தனியாக சுரங்கம் தோண்டும் தனிமைத் தேனீ, செடிகளில் உட்கார்ந்து இலைகளை வெட்டும் Leafcutter (லீஃப் கட்டர்) தேனீ… இவை போன்றவற்றை அடையாளம் தெரிகிறதா? தேனீக்களைத் தொந்தரவு செய்தால்தான் அவை உன்னைக் கொட்டும். அமைதியாக, அதிக அசைவு இல்லாமல் உட்கார்ந்திருந்தால் ஒன்றும் செய்யாது. பார்க்கும் தேனீக்களைப் படம் வரைந்து எடுத்து வா. பிறகு, நீ பார்த்தது எந்த வகைத் தேனீ என்று பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்.நீயே செய்யலாம்... மகரந்தச் சேர்க்கை!மகரந்தச் சேர்க்கை செய்ய தேனீக்கள் உதவுகின்றன. இவை இல்லாவிட்டால், தாவரங்களால் விதைகளை உருவாக்க முடியாது. புதிய தாவரங்கள் உருவாகாது. நாம் உண்ணும் பொருட்களுக்கான பயிர்களை விளைவிக்க விவசாயிகள் பெரிதும் நம்பியிருப்பது தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கையைத்தான்.மகரந்தச் சேர்க்கையை நீயாகவே செய்து பார்க்கலாம்.1. நீ படம் வரைய உபயோகிக்கும் தூரிகையை (Paint Brush பெயிண்ட் ப்ரஷ்) ஒரு பூவுக்குள் கவனமாக நுழை. 2. அதிலிருக்கும் மகரந்தத்தை தூரிகையால் ஒற்றி எடு. பூவுக்குள், நடுப்பகுதியில் மஞ்சளான தூசி போல இருப்பதுதான் மகரந்தம். 3. அது தூரிகையில் ஒட்டிக்கொண்டதும், அப்படியே எடுத்து வா. எந்தப் பூவில் இருந்து மகரந்தம் எடுத்தாயோ அதே வகையான இன்னொரு பூவிடம் போ. 4. அந்தப் பூவின் சூலக முடியை கவனி. அது பிசுபிசுப்பாக இருக்கும். 5. தூரிகையில் இருக்கும் மகரந்தத் தூளை அதன் மேல் பூசு. மகரந்தத்தூள் அதில் ஒட்டிக்கொள்ளும். இதுதான் மகரந்தச் சேர்க்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !