உள்ளூர் செய்திகள்

தீபிகா சாதனை

சீனா, ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் தீபிகா குமாரி மொத்தம் உள்ள 720 புள்ளிகளில், 686 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம், 'ரிகர்வ்' பிரிவில் உலக சாதனையைச் சமன் செய்தார். இதற்கு முன், தென் கொரியாவின் கி போ பெய் (2015) சொந்த மண்ணில் (குவாங்சு) நடந்த உலக பல்கலை. விளையாட்டில் 686/720 புள்ளி பெற்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !