உள்ளூர் செய்திகள்

ஒளியில்தான் தீபாவளி மகிழ்ச்சி!

இதோ அடுத்த வாரம் தீபாவளித் திருநாள் வருகிறது. தீபாவளி என்றாலே மகிழ்ச்சிதான். புத்தாடைகளும், பலகாரங்களும் பட்டாசுமாக அன்றைய தினம் போகும். உண்மையில் தீபாவளியின் மகிழ்ச்சிபற்றி இன்றைய மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, தீபாவளி மகிழ்ச்சி ஒளியிலா? ஒலியிலா? என கேட்டிருந்தோம். மாணவர்களின் கருத்தறிய, கடலுார் மாவட்டம், வடலுார், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம்பாக்கியஸ்ரீ, 9ஆம் வகுப்புவட இந்தியாவில் நிறைய தீபங்கள் ஏற்றிவைத்து, பிரகாசமாக தீபாவளியைக் கொண்டாடுறாங்க. நாம சத்தம் போடும் வெடிகளை வெடிக்கிறோம். ரெண்டுமே மகிழ்ச்சிதான் என்றாலும், பாதுகாப்பாக வெடி வெடிப்பதில் தவறு இல்லை. இரவு நேரங்களில் அதிக ஓசைதரும் வெடிகளைத் தவிர்க்கவேண்டும். சங்கர், 8ஆம் வகுப்புதீபாவளியை விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு அமைதியாகக் கொண்டாட வேண்டும். வெடி வெடிப்பதால் பலருக்கும் கண், காது, சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. விலங்குகள், பறவைகளைப் பாதிக்கிறது. ஒளி, ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால் பட்டாசுகளைக் குறைவாக வெடிக்க வேண்டும். தீபாவளிக்கு, ஒலியும் ஒளியும் வேண்டும் என்றாலும், ஒலி குறைவாக இருக்க வேண்டும். விஷால், 9ஆம் வகுப்புஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளிக்கு வெடி வெடித்தால் மகிழ்ச்சி. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் குப்பைகளை, மறுநாள் அவரவர்களே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமைப் பட்டாசுகளை அதிக அளவில் கொண்டு வரவேண்டும்காவியா, 9ஆம் வகுப்புதீபாவளி என்றால், ஒளியும் ஒலியும் வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, நாய் போன்ற உயிரினங்கள் சத்தம் தாங்காமல் ஓடி ஒளியும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைவிட, ஒளி தரும் பட்டாசுகளே சிறந்தது. இத்தகைய பட்டாசுகளைப் பயன்படுத்தி தீபாவளியைக் கொண்டாடலாம்.கிருஷ்ணப்பிரியா, 9ஆம் வகுப்புஅதிகம் சத்தம் செவிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், இப்போதெல்லாம் 10 ஆயிரம் வாலா சரம் எல்லாம் கொளுத்துறாங்க. அது வெடிச்சு முடிஞ்சும்கூட கொஞ்ச நேரத்திற்கு காதில் அந்தச் சத்தம் இருந்துகிட்டே இருக்கு. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், குறைவான சத்தத்தில் வெடிக்கும் வெடிகளை வெடிக்கலாம். நம்ம சந்தோஷம், மற்றவர்களுக்குக் கஷ்டமாக இருக்கக்கூடாது.கலை, 9ஆம் வகுப்பு தீபாவளிக்கு ஒளி மட்டுமே இருந்தாலும் மகிழ்ச்சிதான். பறவைகள், விலங்குகள் அதிகம் உள்ள பகுதிகளில் வெடி வெடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நமது மகிழ்ச்சியால், அவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது. நம் மகிழ்ச்சிக்கு வெடிகளை குறைவாக வெடித்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !