சமைக்க வேண்டாம் அப்டியே சாப்பிடலாம்!
உணவுப் பொருட்களை சமைத்துச் சாப்பிடுகிறோம். அதேபோல, இயற்கையாக காய்கறிகளைப் பச்சையாக, சமைக்காமல் சாப்பிட்டாலும் அது உடலுக்கு எல்லாவிதமான சத்துகளையும் கொடுக்கவல்லது. அப்படி நீங்களே எளிதாகச் செய்து உண்ணக்கூடிய உணவு வகைகளைப் பார்ப்போம்.தினமும் ஒவ்வொரு வேளை உணவிலும் பலாப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய்க் கீற்றுகள், கேரட், மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்.காய்கறிக் கலவை (Veg Salad - வெஜ் சாலட்)தேவையான பொருட்கள்:* முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, மாங்காய், வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, சீரகத்தூள், மிளகுத் தூள், உப்பு* காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், மாங்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பொடிப்பொடித் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.* சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய்த் துருவல் போன்றவற்றை நறுக்கிய காய்கறித் துண்டுகளுடன் கலக்கவும்.* இந்தக் கலவையுடன் தேவையான அளவு உப்பு கலக்கவும்.* இப்போது, சுவையான, சத்தான காய்கறிக்கலவை உண்பதற்குத் தயார்.* வேகவைத்து, தாளித்து நாம் அன்றாடம் தயாரிக்கும் கூட்டு, பொறியலைவிட இந்த பச்சைக்கலவை பல மடங்கு சுவையிலும், ஆரோக்கியத்திலும் மேம்பட்டது.* இந்த காய்கறிக் கலவையில் முட்டைகோஸ் இதழ்களைச் சுற்றினால் இயற்கையான 'ஸ்பிரிங் ரோல்' தயார்.காய்கறிக் கலவை போலவே பேரீச்சை, திராட்சை, ஆப்பிள், வெள்ளரிக்காய், பலாப்பழம், வாழைப்பழம், பேரிக்காய் போன்ற பழங்களைக் கலந்து, பழக்கலவை (Fruit Salad - ஃப்ரூட் சாலட்) செய்தும் உண்ணலாம்.என்ன, காய்கறிக் கலவை, பழக்கலவை செய்து சுவைக்கத் தயாராகி விட்டீர்கள்தானே!