எலிசபெத் ராணிக்கு புதிய பெருமை
உலகின் மூத்த முடியாட்சி தலைவர் என்ற பெருமையை, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபால் (88), சில நாட்களுக்கு முன் மறைந்தார். 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக மன்னராக இருந்த அவர் உயிரோடிருக்கும் மிக நீண்ட கால மன்னர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது, அவருடைய மறைவையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அந்த பெருமை கிடைத்துள்ளது. அவர், ராணியாக பதவியேற்று 65 ஆண்டுகள் 8 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு 90 வயதாகிறது.