இசையால் வசப்படுத்தியவர்
7.4.1920 - 11.12.2012 பண்டிட் ரவிஷங்கர் பிறந்த தினம்இந்திய இசைக் கலைஞர்களில் உலகம் முழுவதும் தெரிந்த ஒருவர் பண்டிட் ரவிஷங்கர். 'சிதார்' (Sitar) இசைக்கருவி வாசிப்பதில் தேர்ந்தவரான இவர் இந்திய இசையை மேற்குலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தவர். மேற்கத்திய நாடுகளில் இந்திய பாரம்பரிய இசை வடிவமான இந்துஸ்தானி இசையைப் பரவச் செய்து உலகப் புகழ் பெற்றார். ரவிஷங்கரின் குருநாதர் சிதார் கலைஞர் உஸ்தாத் அலாவுதீன் கான். இந்துஸ்தானி இசையில் தனது தனித்துவ முத்திரையைப் பதித்தவர் பண்டிட் ரவிஷங்கர். உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் பிறந்த இவர், தனது இசைக்காக ரமன் மகசேசே விருது, கிராமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 1999ல் பாரத ரத்னா விருது பெற்றார்.