உள்ளூர் செய்திகள்

2018 எதிர்பார்ப்பு

நம்பிகையோடு தொடங்கும் 2018இல் என்னவெல்லாம் நடக்கலாம்? ஆறு துறைகளைப் பற்றி ஆறு வல்லுநர்களின் கருத்துகள் இதோ:சமூக விழிப்புணர்வு வேண்டும் - டி.எம்.கிருஷ்ணாபல நாடுகளில் கலை என்பதை வித்தையாக மட்டுமே பார்ப்பதில்லை. கலை சமூகத்தின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டு, அணுகப்படுகிறது. இந்த புத்தாண்டில் என்னுடைய எதிர்பார்ப்பு இசை மட்டுமல்லாமல், எல்லா கலைகளில் இருக்கும் கலைஞர்கள் சமூக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதுதான். சமூக அக்கறை, அரசியல், புரிதலோடு செயற்பட்டால், அது உண்மையான கலையாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 500 புதிய நூல்கள் இலக்கு - க.நாகராஜன், மேலாளர், புக்ஸ் ஃபார் சில்ரன்குழந்தைகளுக்காக நிறைய நூல்களை, 'புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம்' மூலம் ஏற்கெனவே வெளியிட்டு வருகிறோம். இளையோர் என்று சொல்லப்படும் பதின்ம வயதினருக்காக, அறிவியல் நூல்கள் கொண்டுவந்துள்ளோம். இதனை விரிவுபடுத்தி, கணிதம், வரலாறு, சூழலியல் போன்ற துறைசார்ந்த நூல்களோடு, இலக்கியப் புத்தகங்களையும் சேர்த்து, 500 புத்தகங்களை இந்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். அதோடு, எளிய அறிவியல் சோதனைகளைச் செய்துபார்க்க, அதற்கான பொருட்கள் அடங்கிய 'கிட்' (kit) ஒன்றையும் இந்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறோம். இவர்கள் ஜொலிப்பார்கள்! - ஆர்.அபிலாஷ், எழுத்தாளர்2018இல் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாதக பலன் எப்படியிருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் பதபதைப்பாக இருக்கிறார்கள். இந்தியா இந்த ஆண்டில் முறையே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடப் போகிறது. வெளிநாட்டு ஆடுகளங்களில் நம் வேகவீச்சாளர்கள் சோபிப்பார்களா? விராத் கோலி ரன் குவிப்பாரா? இக்கேள்விகளுக்கு ஆம் என விடை கிடைத்தால் நிச்சயம் இத்தொடர்களை வெல்வோம். என்ன ஆனாலும் கீழ்வரும் வீரர்கள் நிச்சயம் ஜொலிப்பார்கள் என்பது என் கணிப்பு:பேட்ஸ்மேன்கள்: விஜய், புஜாரா பெளலர்கள்: புவனேஷ்வர் குமார், பும்ரா ஆல்ரவுண்டர்: ஹர்த்திக் பாண்டியாகண்டுபிடிப்புகளின் காலம்! - என். மாதவன், அறிவியல் ஆர்வலர்நாசாவின் மூலம் செவ்வாயின் மையப்பகுதியை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் செலுத்தப்படவுள்ளது. இதுவரை செய்த ஆய்வைவிட முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு இது. செவ்வாய்க்கோளின் மையப்பகுதியானது திரவ நிலையிலுள்ளதா, திட நிலையிலுள்ளதா என அய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. 2016இல் அனுப்பப்படவேண்டிய இக்கலன், 2018 மே மாதத்தில் ஏவப்பட உள்ளது. இதுபோல நிதி நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 'ஜேம்ஸ் வெப் ஹபுள்' தொலைநோக்கியும் நிறுவப்பட உள்ளது. இது ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள 'ஹபுள்' தொலைநோக்கியின் மேம்பட்ட வடிவம். முன்னதைவிட ஆறு மடங்கு அதிக அளவிலான செயல்திறன் கொண்டது. பூமியைப் பொறுத்தவரை புவிவோடு மிகவும் மெல்லியதாகக் கருதப்படும் பசிபிக்கடல் பகுதியில் துளையிட்டு, புவியின் மையப்பகுதியை ஆய்வு செய்யும் முயற்சி நடைபெற இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் மாதிரிகளைக் கொண்டு புவியின் வரலாறு குறித்த புதிய பரிமாணம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.20 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் அதிகமான அளவில் பரவிய போலியோ நோயின் தாக்கத்தை உணர்ந்து பல்வேறு நாடுகளும் இதனை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் 2018இல் போலியோ நோய் முற்றாக ஒழியும் என்று பிரகடனப்படுத்தப்பட்டு முயற்சிகள் நடைபெறுவது சுகாதாரத்தில் ஒரு சாதனை.தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வித்துறையை நவீனப்படுத்தும் 'ஸ்மார்ட்' வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட உள்ளன. இவை நனவாக உள்ளதும் மகிழ்ச்சியே.புதிய பாடத்திட்டமே சூப்பர் ஸ்டார் - என். ராமசுப்பிரமணியன், தாளாளர், ஸ்ரீ நடேச வித்யாசாலாபல்வேறு துறையினர் வழங்கிய ஆலோசனைகளை அடுத்து, தமிழக அரசின் பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேவையை உணர்ந்து, பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தாண்டில் கல்வித் துறையில் நடக்கவிருக்கும் பெரிய மாற்றமாக இதை நான் பார்க்கிறேன். புதிய விஷயங்களை அறிமுகம் செய்திருப்பதால், அவை பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, கல்லூரிப்படிப்பின்போது உதவும். மேலும், இவை நல்ல அடித்தளமாக அமையும். வணிகம், பொருளாதாரம் பாடத்திட்டமும் மிகவும் முக்கியம். இந்தப் புதிய பாடத்திட்டத்தில் எக்னோமேட்ரிக்ஸ் (Econometrics) இடம் பெற்றுள்ளது.மனப்பாடம் செய்து, பாடத்தின் பின்னால் கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகளை மட்டும் தயார் செய்தால் போதாது. முழுப் பாடத்தையும் படித்தால் தான், மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கொள்கையோடு பாடத்திட்டம் தயாராகி உள்ளது. உங்கள் மொழியில் தொழில்நுட்பம் - சைபர் சிம்மன், தொழில்நுட்ப ஆர்வலர்2018இல் அதிக ஸ்மார்ட்போன் மாதிரிகள் சந்தையில் குவிய உள்ளன. நோக்கியா 9, சாம்சங் கேலக்ஸி எஸ் 9, கூகுள் பிக்சல் 3, எம்.ஐ.மிக்ஸ் 3 உள்ளிட்ட மாடல்கள் அறிமுகமாகலாம். மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் போனும் சந்தைக்கு வரலாம். இவற்றில் சக்தி வாய்ந்த கேமரா, துல்லியமான டிஸ்பிளே ஆகியவை கவனத்தை ஈர்க்கலாம். இதேபோல, 'சாட்பாட்' என சொல்லப்படும் அரட்டை மென்பொருட்கள் மேலும் பரவலாகும். இ--காமர்ஸ் தளங்கள் உள்ளிட்டவற்றில் இந்த வகை மென்பொருட்கள் நம்மை வரவேற்கலாம். 'போக்கேமான் கோ' விளையாட்டு நினைவு இருக்கிறதா? இந்த விளையாட்டைப் பிரபலமாக்கிய ஆகுமென்டட் ரியாலிட்டி கருத்தாக்கம் இந்த ஆண்டு பெருவாரியான மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் நெருக்கமாகலாம்.தொழில்நுட்பத்தில் உள்ளூர் மொழிகளின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். ஸ்மார்ட்போன்களை நமக்கு பரிச்சயமான மொழியிலேயே இயக்கலாம். தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் பல சேவைகளை அணுகுவது சாத்தியமாகலாம். இதேபோல், குரல் வழி சேவைகளும் இன்னும் பிரபலமாகும். அரசு சேவைகளை மொபைலிலேயே அதிக அளவில் அணுகும் வாய்ப்பு உருவாகும். இவற்றையும் தாய்மொழியிலேயே அளிப்பதில் நிறுவனங்கள் அக்கறை செலுத்தும். செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், ரோபோவியல் ஆகியவற்றிலும், அதிக சுவாரசியங்களை எதிர்பார்க்கலாம். வங்கி அல்லது ஹோட்டல்களுக்குச் சென்றால், ரோபோ வரவேற்கலாம். இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் சார்ந்த சேவைகள், விவசாயிகளுக்காக அதிக அளவில் உருவாக்கப்படலாம். ஆனால், நம் தகவல்களைப் பாதுகாப்பதிலும், பிரைவசியிலும் இன்னும் கவனம் செலுத்தியாக வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !