அமெரிக்காவில் மேயரான முதல் சீக்கியப் பெண்
அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினர் பலர் தற்போது, அரசியலில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அங்கு ஏற்கெனவே அரசாங்கப் பணிகளின் உயர்பதவிகளில் பல இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில்தான் நியூஜெர்ஸி மாகாணத்தின் ஹோபோக்கன் நகரின் மேயராக ரவீந்தர் பல்லா என்ற சீக்கியர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், யூபா நகர மேயராக பிரீத் டித்பால் என்ற சீக்கியப் பெண் தேர்வாகி இருக்கிறார். இது அமெரிக்காவில் வாழும் சீக்கிய மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி மேயர் பதவி ஏற்றுக்கொள்கிறார். அங்கேயே பிறந்து வளர்ந்த பிரீத் டித்பால், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் பல அரசுப் பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.