முதல் முறையாக...
பாட்மின்டன் விளையாட்டில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில்தான் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற முடியும். இதன்படி இந்தியா சார்பில் செய்னா நேவல், பி.வி.சிந்து, ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா, ஸ்ரீகாந்த், மானு அட்ரி, சுமீத் ரெட்டி என, 7 பேர் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியா சார்பில் இத்தனை பேர் பங்கேற்பது இதுவே முதன் முறை.