காந்திஜியும், ராஜாஜியும்...
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பிறகு அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்ட கோட்சேயின் சார்பில் 'தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது. காந்திஜி உயிரோடு இருந்தால் இதை அனுமதிக்க மாட்டார்' என்று எழுதப்பட்ட ஒரு கருணை மனு அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியிடம் கொடுக்கப்பட்டது.அதற்கு ராஜாஜி அளித்த பதில், 'உண்மைதான். காந்திஜி உயிரோடு இருந்தால் கோட்சேக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.'