காந்திபீடியா தயார்!
பல்வேறு தகவல்களைக் கொண்ட கலைக்களஞ்சியம், என்சைக்ளோபீடியா. அதைப் போலவே, மத்திய அரசு காந்திபீடியா திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறது. இன்றைய இளைஞர்களிடம் காந்தியக் கொள்கைகளை கொண்டுபோய்ச் சேர்ப்பது, காந்திபீடியா திட்டத்தின் நோக்கமாகும். கடந்த வெள்ளியன்று மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.