கூகுள் விருது பெற்ற மாணவர்
மீனவர்களின் பாதுகாப்புக்கு உதவும் நவீன கருவியை உருவாக்கியதற்காக 'கூகுள் சமுதாய தாக்கத்திற்கான விருது' (Google Community Impact Award) பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த அத்வே ரமேஷ் என்ற 10ஆம் வகுப்பு மாணவர். சுற்றுச்சூழல், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 'புவி இடம் காட்டி' (GPS) தொழில் நுட்பத்தில் செயல்படும் இந்தக் கருவியின் பெயர் 'பிஷர்மென் லைஃப்லைன் டெர்மினல்' (Fishermen Lifeline Terminal - FELT). இந்தக் கருவியைப் பயன்படுத்தி கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, வந்த ஆராய்ச்சிகளில் இருந்து சிறந்த 100 திட்டங்களை கூகுள் தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 14 ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.