கிடைத்தது தாத்தாவின் குரல் பதிவு
முதல் உலகப் போரில் பிரிட்டனுக்காக லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் போரிட்டனர். இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த வீரர் மால்சிங் என்பவரும் ஒருவர். இவரைக் கைது செய்த ஜெர்மன் படை, அங்குள்ள சிறையில் அடைத்தது. மூன்றாண்டுகளுக்குப் பின் விடுதலை பெற்று நாடு திரும்பிய மால்சிங்க் 65 வயது வரை மகிழ்ச்சியாக தன் குடும்பத்தினரோடு வாழ்ந்தார். அவரது புகைப்படங்கள் குடும்பத்தினரிடம் ஏதும் இல்லை. ஆனால், தற்போது மால்சிங்கின் குரல் பதிவு ஜெர்மனியில் உள்ள ஹூம்போல்ட் பல்கலைக்கழகத்தில் இருப்பது தெரியவந்ததும் மகிழ்ந்த குடும்பத்தினர் அதைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியினால் அவரது குரல் பதிவு இப்போது அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. தாத்தாவின் குரலைக் கேட்டு மகிழ்ந்த அவரது பேரன் நிர்மல் சிங் மற்றும் கொள்ளுப் பேத்தி குர்மீத் கௌர் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.