உள்ளூர் செய்திகள்

ஆளுநர் பொறுப்பேற்பு

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் தற்காலிக ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக ஆளுநராகப் பதவி வகித்த ரோசைய்யாவின் பதவிக் காலம், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதை அடுத்து, வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பாக, தமிழக ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், செப்டம்பர் 2 அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், வித்யாசாகர் ராவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !