உள்ளூர் செய்திகள்

உடல் வெப்பத்தை தணிக்கும் பாணம்

கோடை காலம் தொடங்கிவிட்டது. ஆண்டுதோறும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக, செய்திகளில் படிக்கிறோம். வெப்பத்தால் உடலுக்குள் ஏற்படும் உஷ்ணத்தைத் தணிக்க, இயற்கையான வழிகள் உள்ளன. கோடை வெயிலைச் சமாளிக்க, அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் வரை குடிப்பது அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழ வகைகளை உண்பது உடலுக்கு நல்லது.கோடை வெயிலைச் சமாளிக்க, எளிய முறையில் செய்து பருகக்கூடிய பானம் எலுமிச்சை ஜூஸ். எலுமிச்சை அற்புதமான பானம். செய்வதும் எளிது. எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நீருடன் கலந்து குடிக்கலாம். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதே நல்லது. எலுமிச்சை சாற்றில் வேறு சில இயற்கையான பொருட்களையும் சேர்த்துப் பருகினால், உடலுக்குப் பல்வேறு நலன்களைத் தரும். தேன், மஞ்சள் தூள், பனை வெல்லம், பட்டை பொடி போன்றவற்றை எலுமிச்சைச் சாறுடன் கலந்து பருகலாம். சுவையான எலுமிச்சை சாறு பானம் தயார்.எலுமிச்சை சாறு புத்துணர்வும், சுறுசுறுப்பும் அளிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். கோடை காலத்தில் தினமும் ஒருமுறை எலுமிச்சை சாறு பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் இன்னும் நல்லது.தேவையான பொருட்கள்எலுமிச்சம் பழம் - 1நீர் - 1 டம்ளர்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்தேன் - 1 ஸ்பூன்பட்டை பொடி - 1 சிட்டிகைதயாரிக்கும் முறைஎலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.எலுமிச்சை சாறுடன், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்.தேன், மஞ்சள் தூள், பட்டைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.- கி.சாந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !