உள்ளூர் செய்திகள்

வரலாற்றுத் தடம்: யானை மிதிக்கும் தண்டனை

திருக்கழுக்குன்றம் கோயிலில் ஒரு திருட்டு நடந்தது. ஐந்தன் என்பவன் கோயிலுக்குள் நுழைந்து, பொற்காசுகளைத் திருடிவிட்டான் என்று கோயில் அதிகாரி குற்றம் சாட்டினார். இதை விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். விசாரணை நடக்கும் சமயத்தில் ஐந்தன் ஊரை விட்டே ஓடி விட்டான். ஆகையால் அவனுடைய வயல்கள் ஏலம் விடப்பட்டு கோயில் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. சிறிய திருட்டுக் குற்றங்களுக்கும் திருடனுடைய கை, கால்கள் எடுக்கப்பட்டன. பெரிய குற்றங்களுக்கு தாடையில் கூர்மையான கொக்கியை மாட்டி, தொங்க விட்டனர். அரசுக்கு எதிராக துரோகம் செய்தவர்களை கழுவில் ஏற்றி மரண தண்டனை வழங்கினர். அரசனுடைய கோபத்திற்கு ஆளானவர்களை, யானையின் முன் தள்ளி, அதன் கால்களால் மிதியுண்டு இறக்கும் தண்டனை தரப்பட்டது.இவ்வகையான தண்டனைகள் விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !