உள்ளூர் செய்திகள்

எவ்வளவு... எத்தனை?

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சொல் காலப்போக்கில் அதன் வடிவம், பொருள் ஆகியவற்றில் மாற்றம் அடைவதுண்டு. இந்த மாற்றங்களைக் கண்டறிவதே சொற்பிறப்பு வரலாறு (etymology) எனப்படும். மொழிப் பயன்பாட்டில் இத்தகைய மாற்றங்கள் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தினால், அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.எவ்வளவு? எத்தனை? இவ்விரு சொற்களையும் எங்கே பயன்படுத்த வேண்டும் என்று சிலருக்குத் தெரிவதில்லை.''எவ்வளவு வீடு இருக்கும் அங்கே?'' என்று கேள்வி கேட்பார்கள். இது தவறு. எத்தனை வீடு இருக்கும் அங்கே? என்றுதான் கேட்க வேண்டும்.எண்ணக்கூடிய பொருட்களுக்கு எத்தனை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். எத்தனை வீடு இருக்கு? எத்தனை பேனா வைத்திருக்கிறாய்? எத்தனை பழங்கள் உள்ளன? இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 'எவ்வளவு' என்ற சொல் எண்ண முடியாதவற்றை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.எடுத்துக்காட்டு, எவ்வளவு நெல், எவ்வளவு நட்சத்திரம், எவ்வளவு தண்ணீர்?ஆங்கிலத்தில் 'எவ்வளவு' என்பதை 'How much' என்று குறிப்பிடுகிறார்கள். எத்தனை என்பதை 'How many' என்கிறார்கள்.- ஏ. ஆதித்தன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !