நூற்றுக்கு நூறு: எடை கணக்கு
ஒரு வகுப்பில் மாணவர்களின் எடை அளவிடப்பட்டது.வகுப்பில் மொத்தம் 50 மாணவர்கள் இருந்தனர்.மொத்த மாணவர்களின் சராசரி எடை 45 கிலோகிராம் என்று வந்தது.அப்போது, ஒரு மாணவர் வகுப்பிலிருந்து வெளியேறினார். அதனால், சராசரி எடையின் அளவில் 100 கிராம் குறைந்தது.எனில், வகுப்பிலிருந்து வெளியேறிய மாணவரின் எடை என்ன?விடை: 49.9 கி.கி.விளக்கம்:50 மாணவர்களின் மொத்த எடை = 50×45 = 2250 கி.கி.49 மாணவர்களின் சராசரி எடை = 45 கி.கி. - 100 கி.= 44.9 கி.கி.49 மாணவர்களின் மொத்த எடை = 49×44.9 = 2200.1 கி.கி.ஆக, வகுப்பிலிருந்து வெளியேறிய மாணவரின் எடை= 2250 - 2200.1 = 49.9 கி.கி.