உள்ளூர் செய்திகள்

சரியாத்தான் படிக்கிறேன்...

ஓர் ஆங்கிலச் சொல். Wind. இதை எப்படிப் படித்தீர்கள்? 'விண்ட்' என்று படித்தீர்கள். இதன் பொருள் உங்களுக்கே தெரியும். காற்று. இதே சொல்லை 'வைண்ட்' என்றும் படிக்கலாம். 'சுழற்றுதல்' என்ற பொருளில் வரும். இப்படி ஆங்கிலத்தில் பல சொற்கள் உங்கள் பாடப் புத்தகத்திலேயே இருக்கும். இங்கே சில சொற்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். Bear - பேர் (beuh) என்று உச்சரித்தால் கரடி; பியர் (ber) என்றால் பொறுத்துக்கொள் என்கிற பொருள். Lead - லீட் (li d) என்றால் 'நடத்திச்செல்' என்று பொருள்; இதே பயன்பாட்டின் இறந்த காலம், 'லெட்' என உச்சரிக்கப்படுகிறது. Live - லிவ் (liv) என்று சொன்னால், 'வாழ்' என்று பொருள். 'நேரடி ஒளிபரப்பு' என்னும் இடத்தில் 'லைவ்' என்கிற உச்சரிப்பைப் பயன்படுத்துகிறோம். Minute - நிமிடம் என்பதை மினிட் (min.it) என்கிறோம். 'நுண்ணிய' என்பதை மைன்யூட் (ma inju t) எனச் சொல்கிறோம். Read - 'வாசி', 'படி' ஆகியவை ரீட் (ri d). இதன் இறந்த காலம் 'ரெட்' என்று ஆகிறது. Wear - வியர் (we'r) என்றால் 'அணிந்துகொள்'; வேர் (weər) என்பது அணிந்துகொள்ளப்படும் ஆடை. எவ்வளவு நுட்பமாக இருக்கிறது பார்த்தீர்களா! குறிப்பு: ஆங்கிலச் சொற்களை அதே ஒலியோடு எழுத இயலாது. எனவே ஆங்கில அகராதிகளில் தரப்பட்டிருக்கும் ஒலிக்குறிப்புகள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன. நீங்கள் இணையத்தில் ஒலிவடிவிலேயே கேட்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !