உள்ளூர் செய்திகள்

அமிழ்தமிழ்து: பழமொழியில் வரும் எண்கள்

பேச்சிலும் எழுத்திலும் எண்ணுப் பெயர்களைப் பயன்படுத்துவது நம் வழக்கம். எதுவாயினும் எண்ணிக்கொள்வது ஓர் ஒழுங்கு. அதனால் நம் வாழ்க்கையில் எண்ணுப் பெயர்களுக்குக் கட்டாயமான இடம் உண்டு.எண்ணுப் பெயர்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் பழமொழிகள், சொலவடைகள் பல. போகிற போக்கில் எண்களைப் பயன்படுத்திச் சொல்லப்படுபவை அவை. கீழே எண்ணுப் பெயர்கள் இடம்பெறும் பழமொழிகள் தரப்பட்டிருக்கின்றன. அந்த எண்ணுப் பெயரை மட்டும் நீங்கள் நிரப்பவேண்டும். எளிமையான புதிர்தான். நமக்கு எண்ணுப் பெயர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்று உணர முடியும்.அ) தான் பிடித்த முயலுக்கு __________ கால் ஆ) ஆனை இருந்தாலும் __________ பொன்; இறந்தாலும் __________ பொன் இ) சுண்டைக்காய் __________ பணம்; சுமைக்கூலி __________ பணம் ஈ) பசி வந்தால் __________ம் பறந்துபோகும். உ) ஒரே கல்லில் __________ மாங்காய் ஊ) நொறுங்கத் தின்றால் __________ வயது-மகுடேசுவரன்விடைகள்:அ. மூன்றுஆ. ஆயிரம்இ. கால், முக்கால்ஈ. பத்துஉ. இரண்டுஊ. நூறு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !