இந்த வார முக்கிய தினங்கள்
ஏப்ரல் 19, 1906: தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது இவர்கள்தான். பிரெஞ்சு இயற்பியலாளர் பியரி கியூரி (Pierre Curie) மறைந்த நாள். ஏப்ரல் 20, 1889: வகுப்பில் முதல் மாணவன். மிகச் சிறந்த ஓவியர். ஜெர்மனி 'நாசி' (Nazi) கட்சியின் தலைவர். இரண்டாம் உலகப்போருக்குக் காரணமாக இருந்த சர்வாதிகாரி. 'மெயின் காம்ப்ஃ' (Mein kampf) என்ற சுயசரிதை எழுதிய அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) வட ஆஸ்திரியாவில் பிறந்த நாள்.ஏப்ரல் 22, 1870: ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவக் காரணமான புரட்சியாளர். தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தவர். 'என் பிறந்த நாளை யாரும் கொண்டாடக் கூடாது' என்று உத்தரவிட்ட 'விளாடிமிர் லெனின்' பிறந்த நாள்.ஏப்ரல் 24, 1820: கிறிஸ்தவ சமய போதகராக தமிழ்நாட்டிற்கு வந்து தமிழுக்குச் சேவை செய்தார். பல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று தனது கல்லறையில் எழுதச் சொன்ன ஜி.யு.போப் பிறந்த நாள்.