அதிகரிக்கும் திறன்பேசிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த சிஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் விஷுவல் நெட்வொர்க் இண்டக்ஸ் எனும் அறிக்கையை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்தியாவில் திறன் பேசி (Smart phone) உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை மிகவேகமாக உயர்ந்து வருவதாகவும், இன்னும் 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2 மடங்காகும் என்றும் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு வரை இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 27 சதவீத மக்கள் மட்டுமே திறன்பேசிகளைப் பயன்படுத்தி வந்தனர். அதிகரித்து வரும் இணைய உபயோகத்தைக் கணக்கிட்டு, 2022ஆம் ஆண்டில் 82.9 கோடி மக்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்துவர் என்று அவ்வறிக்கை கூறுகிறது. அதாவது மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் தொடுதிரைபேசி உள்ளவர்களாக மாறியிருப்பர் என்பதே அதன் பொருள்.