இந்திய நடனங்கள்: தவறான ஜோடி எது?
கீழே உள்ள ஜோடிகளில், மூன்று ஜோடிகள் சரியானவை; ஒன்று தவறானது. அந்தத் தவறான ஜோடியைக் கண்டறியவும்.1. மாநில நடனங்களில் தவறான ஜோடி எது?A) குச்சிப்புடி -ஆந்திரப்பிரதேசம்B) பிஹு - நாகாலாந்துC) கர்பா - குஜராத்D) கதக் - உத்தரப்பிரதேசம்2. நடன நூல் மற்றும் ஆசிரியர் ஜோடிகளில், தவறான ஜோடி எது?A) நாட்டிய சாஸ்திரம் - பரத முனிவர்B) அபிநய தர்பணம் - நந்திகேஸ்வரர்C) சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்D) கூத்தநூல் - சிகண்டி முனிவர்3. நடனம் மற்றும் நடனக் கலைஞர்களில் தவறான ஜோடி எது?A) பரதநாட்டியம் - பத்மா சுப்ரமணியம்B) கதக் - பண்டிட் பிர்ஜு மகாராஜ்C) ஒடிசி - கேளுச்சரண மகபாத்ராD) கதகளி - ருக்மிணி தேவி அருண்டேல்4. நடனம் மற்றும் இசைக்கருவிகளின் அடிப்படையில் கீழ்வரும் ஜோடிகளில் எது தவறானது?A) ஒடிசி - மர்தாலாB) குச்சிப்புடி - மிருதங்கம் மற்றும் காஞ்சிராC) கதக் - தபேலா மற்றும் பக்காவாஜ்D) பரதநாட்டியம் - செண்டைவிடைகள்:1. B [பிஹு - அஸ்ஸாம்)2. D [கூத்தநூல் - சாத்தனார்]3. D [கதகளி - கலாமண்டலம் கோபி]4. D [பரதநாட்டியம் - மிருதங்கம், நட்டுவாங்கம்]