ஐ.பி.எல். திருவிழா
ஒன்பதாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் மும்பையில் தொடங்கியது. வண்ணமயமான தொடக்க விழாவில், 'பாலிவுட்' நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், கத்ரினா கைஃப் நடனமாடினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ, 'வீ ஆர் சாம்பியன்' என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தினார். மும்பையில் நடந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.