உள்ளூர் செய்திகள்

அதிகக் கண்டிப்பு அவசியமா?

பிள்ளைகள், மாணவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள்தான் பெற்றோரும் ஆசிரியரும். அக்கறை என்பது சில நேரங்களில் அதிகக் கண்டிப்பாகவும் மாறிவிடுகிறது. பிள்ளைகள் நலனுக்காகத்தான் என்றாலும், அதிகக் கண்டிப்பு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களிடம் அதிக கண்டிப்புடன் நடந்துகொள்ளலாமா என்பது குறித்து, சுங்குவார்சத்திரம், சந்தவேலூர், மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் உரையாடினார்கள். அன்பு காட்டிப் பேசி, புரியவைப்பதே சரி என்றும், கண்டிப்பு அவசியம்தான் என்றும் மாணவர்கள் தங்களது கருத்துகளை உற்சாகத்துடன் பரிமாறிக்கொண்டார்கள்.பா.ஜெயஸ்ரீ, 11ம் வகுப்புஎங்க மேல உள்ள அக்கறையாலதான் பெற்றோரும், ஆசிரியரும் கண்டிப்போட நடந்துக்கறாங்க. நல்லா படிக்கிறவங்களுக்குக்கூட தூண்டுதல் தேவையா இருக்கு. இதுக்குக் காரணம், எங்களுக்கு நிறைய கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. உளி விழும்போது வலின்னு நினைச்சா, எந்தக் கல்லும் சிலையாகாது. அதனால கண்டிப்பா நடந்துக்க வேண்டியது அவசியம்தான். இது நம்மோட நல்லதுக்குதான்னு பாசிட்டிவா எடுத்துக்கணும். படிக்கச் சொல்றதால அவங்க நம்மகிட்ட கண்டிப்பா நடந்துக்கறான்னு அர்த்தமில்ல. இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பு அவசியம்தான்.நா.இராம் நாச்சியப்பன், 10ம் வகுப்புபேரன்ட், டீச்சர்ஸ் ஏன் பசங்களை அதிகக் கண்டிப்போட நடத்தணும்? அக்கறையை அன்புகாட்டி, பேசிப் புரியவைக்கலாமே! நூத்துக்கு தொண்ணூறு மார்க் வாங்கினாலும், ஏன் பத்து மார்க் குறைவா இருக்குன்னுதான் கேக்கறாங்க. படி, படின்னு வற்புறுத்தறதால, கண்டிக்கறதால யாரும் படிச்சிட மாட்டாங்க. படிப்போட முக்கியத்துவத்தை அவங்களோட வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லிப் புரிய வைக்கலாம். அதனால அக்கறையை அன்பாவும், கனிவாவும் சொல்லிப் புரியவைக்கலாம். கண்டிக்கறதால எந்தப் பயனும் இல்ல. படிப்பு மேல வெறுப்புதான் வரும்.வெ.பிரம்மவித்யா, 11ம் வகுப்புமாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்லியிருக்காங்க. இதுல பெற்றோரும், ஆசிரியரும்தான் முதல் இடத்துல இருக்காங்க. படி, படின்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு? எவ்வளவு காலம் படிக்கப் போறோம்… படிக்கற வயசில படிக்கணும்ங்கறதுக்காகத்தான் கண்டிப்போட நடந்துக்கறாங்க. அதுக்காக, படிப்பை வெறுக்க முடியுமா? நம்ம மேல இருக்கற பாசத்திலயும், அன்புலயும்தான் அப்படி நடந்துக்கறாங்க. தங்களால படிக்க முடியலை, நம்ம பசங்களாச்சும் நல்லா படிக்கணும்னு நிறைய பெற்றோர் நடந்துக்கறாங்க. இதுல ஒரு தப்பும் இல்லை. மாணவப் பருவத்துல இந்தக் கண்டிப்பு நமக்குக் கசக்கும். ஆனா பின்னால நல்லா படிச்சு, வேலைக்குப் போகும்போது, கண்டிப்போட அருமை புரியும்.சு.நித்திஷ்குமார், 11ம் வகுப்புஅதிகக் கண்டிப்பு என்பது தேவையில்லாதது. அக்கறையா இருக்கறதை கண்டிப்புல காட்ட வேண்டியதில்லை. பொறுமையா எடுத்துச் சொல்லி புரிய வெச்சாலே போதும். எங்களுக்கு இருக்கற பாடத்திட்டம், அதிக மன அழுத்தத்தை கொடுக்கறதா இருக்கு. தினமும் ஒரு எக்சாம்னு எழுத வேண்டியிருக்கு. இது பாடத்து மேல அக்கறைய ஏற்படுத்தறதைவிட டென்ஷனாதான் ஆக்குது. இதுல அக்கறையா இருக்கறோம்ங்கற பேர்ல, எங்க கிட்ட கண்டிப்போட நடந்துகிட்டா எங்களுக்கு சோர்வுதான் ஏற்படுது. படிப்போட முக்கியத்துவம் எங்களுக்கும் தெரியும். அந்தக் காலத்துல அடிச்சு, கண்டிச்சு படிக்க வெச்சாங்க. இப்ப அப்படியில்ல. எங்களோட எதிர்காலம் படிப்புதான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். கண்டிப்பு என்ற பேர்ல, எங்களை கட்டிப் போடறது சரியில்ல. அன்பா பேசியே எங்களை வழிநடத்தலாம். அதைத்தான் நாங்க எதிர்பார்க்கிறோம்.ச.கவிப்பிரியா, 10ம் வகுப்புநாங்க படிக்கிறோம், எங்களுக்கு வழிகாட்டுங்க. அதையே கண்டிப்பா காட்டினா அது எங்களுக்குப் பிடிக்காததா ஆகிடுது. பெரும்பாலும் பேரன்ட்ஸ் தங்களோட கனவுகளை நாங்க நிஜமாக்கணும்னு நினைக்கறாங்க. எங்களுக்கும் கனவுகள், விருப்பங்கள் இருக்கு. அதைப்பத்தி யாரும் கவலைப்படறதில்ல. தப்பு செஞ்சா கண்டியுங்க, திருத்துங்க. ஆனா படிக்கற விஷயத்தில கண்டிப்பு தேவையில்ல. என்ன படிக்கணும், விருப்பம் என்னன்னு நாங்கதான் தேர்ந்தெடுக்கணும். ஆனா பேரன்ட்ஸ் வற்புறுத்தலால பிடிக்காத சப்ஜெக்டை எடுத்துட்டு எத்தனையோ பேர் கஷ்டப்படறாங்க. அக்கறையா இருங்க, அன்பா சொல்லுங்க, கனிவோட நடந்துக்கோங்க. நாங்க நிச்சயமா நல்ல மாற்றத்தைப் பெறுவோம். ச.கார்த்திகேயன், 12ம் வகுப்புஅளவுக்கு அதிகமான அன்பு, கண்டிப்பு ரெண்டுமே அவசியம் இல்லாதது. இரண்டுமே தவறுதான். அக்கறைன்ற பேர்ல, அதிகக் கண்டிப்பு காட்டறது சரியான வழி இல்லை. கண்டிக்க வேண்டிய நேரத்தில கண்டிக்கலாம். கட்டாயப்படுத்தி எதையும் சாதிக்கவைக்க முடியாது. கோபப்படாம அன்பா எதையும் சொல்லிக் கொடுத்தா, அதுல இருக்கிற நன்மைகளை தெரிஞ்சு நாங்களே புரிஞ்சுக்குவோம்.. எங்களோட மனசைப் புரிஞ்சுகிட்டு எங்களை நல்வழிப்படுத்தறதைதான் நாங்க எதிர்பார்க்கிறோம். கண்டிப்பா வளர்க்கறது, எங்களுக்குள்ள எதிர்மறையான எண்ணங்களைத்தான் விதைக்குது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !