காணிக்கை பெறும் காளி!
நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான விஜயதசமியில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தசரா விழா பிரபலமானது. இம்மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, ஆண்டுதோறும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்த்து வருகிறது.குரங்கு, போலீஸ், பிச்சைக்காரர், காளி என, பக்தர்கள் வேடமிட்டு பங்கேற்கும் சூரசம்ஹார விழா முக்கியமானது. மக்களிடம் காணிக்கை பெற்று, தசரா விழாவில் பங்குபெறும் பக்தர்கள், அனைவரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கும் விழா இது என்கிறார்கள்.