அசத்தும் கமலி!
நியூசிலாந்தைச் சேர்ந்த சாஷா என்பவர் எடுத்த ஆவணப்படம், 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படம் தமிழகத்தின் மாமல்லபுரத்தைச் சேர்ந்த கமலி என்னும் 9 வயது சிறுமி வாழ்க்கையைப் பற்றியது. மீனவக் குடியிருப்பைச் சேர்ந்த கமலி ஸ்கேட்டிங், சர்ஃபிங் என்று அசத்தி வருகிறார். அவரின் வாழ்க்கையைச் சொல்கிறது இந்த ஆவணப்படம்.