உள்ளூர் செய்திகள்

இசையால் இணைவோம்: ஹெட்போன் vs பாஸ் ஸ்பீக்கர்

1. காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்பதால் என்ன பயன்?பாடலின் ஒலித்துல்லியத்தை உணரலாம். 3டி இசைத் தொழில்நுட்பத்தை இசைப்பிரியர் உணர முடியும்.2. ஓர் அறையில் பாஸ் ஸ்பீக்கர் கொண்டு பாடல் கேட்பதால் என்ன பயன்?பாடலின் குறைந்த ஒலிகளை நன்கு உணர்ந்து மகிழமுடியும்.3. ஹெட்போனின் பின்னடைவு?பாஸ் ஸ்பீக்கர் போல உடல் முழுவதும் ஒலியலை பரவாது. ரசிகரின் காதுகள் மூலம் மூளைக்கு மட்டுமே செல்லும். டிஜே பார்ட்டி உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஸ்பீக்கரே வெற்றிபெறும்.4. பாஸ் ஸ்பீக்கரின் பின்னடைவு என்ன?நுண் இசைக்கருவி சத்தங்களை ரசிக்க முடியாது. எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியாது.5. இரண்டிலுமே உள்ள பாதகம் என்ன?இரண்டுமே நீண்டநேரம் பயன்படுத்தும்போது மகிழ்ச்சிக்கு மாறாகத் தலைவலி, மன உளைச்சலை ஏற்படுத்தும்.6. எது வெற்றி பெற்றது?இரண்டுமே வெவ்வேறு விதமான இசை அனுபவங்கள். ஆனால் ஹெட்போனில் இசை வெளியாகும்போது வெளி சத்தங்கள் இன்றி இசையை நன்றாக உணரமுடியும். எங்கு வேண்டுமானாலும் பாடல் கேட்டு மகிழமுடியும். விலையும் குறைவு. எனவே ஹெட்போனில் சாதகங்கள் அதிகம். ஆனால் பாஸ் ஸ்பீக்கரின் உணர்வை ஹெட்போனில் பெறமுடியாது. எனவே நல்ல இசையை ரசிக்க இரண்டுமே தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !