இசையால் இணைவோம்: மெய்யா பொய்யா
1. இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கண மன' முதலில் வங்காள மொழியில் எழுதப்பட்டது.____________2. இந்தியாவின் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு 50 வினாடிகள்.____________3. எம்.எஸ். சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் ஆவார்.____________4. இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியுள்ளது.____________5. 'தேசியக் குயில்' டி.கே. பட்டம்மாள், பாரதியாரின் தேசப்பக்தி பாடல்களைப் பாடி மக்களிடையே பிரபலமாக்கினார்.____________விடைகள்:1. மெய்.2. பொய். இந்தியாவின் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு 52 வினாடிகள் ஆகும். 3. மெய். 4. பொய். இந்திய அரசு, வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட 150வது ஆண்டை முன்னிட்டு 2025 நவம்பர் 7 முதல் 2026 நவம்பர் 7 வரை ஓராண்டு காலக் கொண்டாட்டமாக அறிவித்துள்ளது.5. மெய்.