நன்மையை எடுத்துக் கொள்வோம்!
ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தின் ஓர் உறுப்பினர் போலவே இடம்பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது தொலைக்காட்சி. பொழுதுபோக்கு, நாடகம், திரைப்படம் என, பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களை ஈர்க்கும் தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருப்பது என்பது சவாலான விஷயம்தான். பெரும்பாலான மாணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்க்க நேரம் ஒதுக்குகிறார்கள்? பார்க்கும் 'சேனல்கள்' எவை? என்பதைப்பற்றி திருவள்ளூர், போளிவாக்கம், விஸ்வக்சேனா வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். அவர்கள் கருத்துகளைக் காண்போம்.செ.பௌர்ணா, 9ஆம் வகுப்புநான் டிஸ்கவரி சேனல் பார்ப்பேன். கார்ட்டூன் நிகழ்ச்சி பிடிக்கும். தினமும் அரை மணிநேரம் பார்ப்பேன். ஆனா, அடுத்த ஆண்டு பத்தாவது போறதால டிவி பார்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. டிவி பார்க்கறதால படிப்பு பாதிக்காது. ஆனா, ரொம்ப நேரம் அதில செலவழிக்கக்கூடாது. தா.சுவாதி, 10ஆம் வகுப்புவிடுமுறை நாட்கள்ல மட்டுந்தான் டிவி பார்ப்பேன். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பாட்டு இதுதான் பார்க்கப் பிடிக்கும். எப்பவும் படிச்சிட்டே இருக்கறதுல இருந்து, சின்ன ஓய்வா டிவி நிகழ்ச்சிகள் இருக்கு. அதனால, வாரத்துல ஒரு நாள் 3 மணி நேரம் டிவி பார்ப்பேன். டிவி பாக்கறது கெட்டதுன்னு சொல்ல முடியாது. அதுல வர்ற நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கணும்.கா.தன்ஷா, 11ஆம் வகுப்புமுன்னாடியெல்லாம் நான் அதிகமா டிவி பார்த்துட்டு இருந்தேன். ஆனா, இப்ப படிக்கறதுல அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கறதால டிவி பாக்கறதை நிறுத்திட்டேன். டிவி நிகழ்ச்சிகளை எப்போ வேணா பார்த்துக்கலாம். ஆனா, படிப்பைத் தவறவிட்டா எதிர்காலம்தான் பாழாகும்.சீ.ஹரிஹரன், 10ஆம் வகுப்புடிஸ்கவரி, ஹங்காமா, கார்ட்டூன் இதெல்லாம் எனக்குப் பிடிச்ச சேனல்கள். எவ்வளவு நேரம்னு சொல்ல முடியலை. ஆனா, சில சமயம், நேரம் போறதே தெரியாம டிவி பார்த்துட்டிருப்பேன். அதனால, படிக்க வேண்டிய பாடங்களை அவசர அவசரமாகப் படிக்க வேண்டியதாகிவிடும். வீ.விக்னேஷ், 11ஆம் வகுப்புஹிஸ்டரி, அனிமேஷன், கார்ட்டூன் சேனல்கள் பிடிக்கும். அனிமேஷன்ல ரொம்ப இன்ட்ரஸ்ட் இருக்கு. அது சம்பந்தமா பல நிகழ்ச்சிகளைப் பாக்கறதால, என்னுடைய கிரியேட்டிவிட்டியை வளர்த்துக்க முடியுது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் டிவி பார்ப்பேன். ஆனா, படிப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.ஜெ.சந்தோஷ்குமார், 12ஆம் வகுப்புவாரத்துல ஒரு நாள்தான் டிவி பார்க்க முடியுது. படிக்கற வேலை நிறைய இருக்கறதால, டிவியை அதிகம் பாக்கறதில்ல. டிவி நிகழ்ச்சிகள் பிடிக்காது. வீட்ல சாப்பிடற நேரத்துல செய்தி பார்ப்பேன். டிவியை விட யூடியூப் வீடியோக்கள் பாக்கறதுதான் பிடிச்சிருக்கு.