உள்ளூர் செய்திகள்

குறைந்த விலை ஏ.சி., குளுகுளு காற்று

எல்லோருக்கும், குளிர்சாதன வசதியைப் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பொருளாதார வசதி படைத்தவர்கள் மட்டுமே, அதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார், வங்கதேசத்தைச் சேர்ந்த ஆஷிஷ் பால்.இதுதொடர்பாக, ஆஷிஷ் கூறும்போது, 'காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம், வெப்பநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அறைக்குள் நுழையும் காற்றை, குறுகலான பாதைகளில் வெளிவரச் செய்ய வேண்டும். அப்போது குளுமையான காற்று கிடைக்கும். பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி, இதைத் தயாரித்துள்ளேன். வங்கதேசத்தில், தகர குடிசைகளுக்குள் வாழும் மக்களுக்கு, கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !