800 ஆண்டுகளுக்கு முன்பே மேட் இன் சைனா வாசகம்
பல நூறு ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் இருந்த பொருட்களில், 'மேட் இன் சைனா'(Made in China) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த 1980களில், இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில், மூழ்கிய சரக்குக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக ஆய்வு செய்த விஞ்ஞானி லிசா நிசியோலெக் கூறியதாவது, ' மூழ்கிய கப்பல் முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஆனால், அதற்குள் பீங்கான் பாத்திரங்கள் மற்றும் யானைத் தந்தங்கள் எஞ்சியிருந்தன. எத்தனை வருடங்களுக்கு முன் கப்பல் மூழ்கியது என்பது 1990ல் இருந்தே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பீங்கான் பாத்திரத்தில் இருந்த 'மேட் இன் சைனா' என்ற வாசகம், அதற்கான விடையைத் தெளிவாக அளித்துள்ளது. சீனா கடல் வாணிபத்தில் உச்சத்தில் இருந்த 12ஆம் நூற்றாண்டில்தான் (800 ஆண்டுகளுக்கு முன்) தெரியவந்துள்ளது. கிட்டதட்ட 1 லட்சம் பீங்கான் பாத்திரங்கள் கப்பலில் சென்றுள்ளது. ' என்று தெரிவித்துள்ளார்.