சந்தைப் பாட்டு
அதிராம்பட்டினம் ஒரு சிற்றூர்அலைகடலோரம் நிற்கும் ஊர்குதிரைகள் உலவிய காலம்அதுகுளுகுளு மரங்கள் ஆடினவாம்மரங்கள் சூழ்ந்த திடல்ஒன்றுமறுநாள் சந்தை கூடும்என்றுகறிகள் காய்கனி மூட்டைகள்பரிமேல் வந்து குவிந்ததன்றுமிளகாய்ப் பழங்கள் சிலமூட்டைமிளகு, லவங்கம் மசால்பட்டைஇளநீர், தலையில் ஓர்ஓட்டை!இளைப்பை ஆற்றக் குவிந்தனவாம்உருளைக் கிழங்கு உருள்கிறதுசர்க்கரை வள்ளி சிரிக்கிறதுகருணைக் கிழங்கின் அன்புக்குசேனை, படையுடன் வருகிறதுரத்தச் சிவப்புத் தக்காளிகோபம் இல்லை, இனிக்கிறதுபித்தம் தீர்க்கும் இஞ்சியுமேபிறிதொரு இடத்தில் கிடக்கிறதுவாழச் சொல்லி வலியுறுத்தும்வாழைக் காய்ஒரு பக்கத்தில்ஏழைக்கும் ஆப்பிள் சத்துதரநெல்லிக் காயும் கிட்டத்தில்ஈரம் இருந்தால் மீன்என்பார்காய்ந்தால் பாவம், கருவாடுஇரண்டும் பக்கம் பக்கத்தில்எதையோ உணர்த்தும் எண்ணத்தில்சேராப் பொருட்கள் சேர்ந்தாலேவிந்தை என்பார் பொதுவாகஇங்கே பொருட்கள் சேர்ந்தஇடம்சந்தை என்போம் சரியாக!ரமேச்சு