உள்ளூர் செய்திகள்

எதிலும் கணிதம்: விரலை எண்ணும் சிறுவன்

ஒரு சிறுவன் தனது இடது கையின் விரல்களை பின்வருமாறு எண்ணுகிறான்:1- கட்டைவிரல் (Thumb)2- ஆள்காட்டி விரல் (Index finger)3- நடுவிரல் (Middle finger)4- மோதிர விரல் (Ring finger)5- சுண்டு விரல் (Little finger).பிறகு அப்படியே பின்னோக்கி எண்ணுகிறான்.6- மோதிர விரல்7- நடுவிரல்8- ஆள்காட்டி விரல்9- கட்டை விரல்.மீண்டும் இந்தச் சுழற்சியை மேற்கொண்டு, 2026 வரை சிறுவன் எண்ணினால், எந்த விரலில் முடிப்பார்?விடை: ஆள்காட்டி விரல்.விளக்கம்:சிறுவன் விரல்களை எண்ணும் வரிசையைக்1-T,2-I,3-М,4-R,5-L,6-R,7-M, 8-1.அடுத்த எண் 9. மீண்டும் கட்டை விரலில் (T) தொடங்குகிறது.எனவே, இந்தச் சுழற்சி ஒவ்வொரு 8 எண்களுக்கும் ஒருமுறை மீண்டும் மீண்டும் வருகிறது. ஆதலால், 2026ஐ 8 ஆல் வகுப்போம். மீதி2 கிடைக்கும்.மீதி 2 கிடைப்பதால், சுழற்சியில் வரும் 2வது எண்ணே, 2026வது எண்ணிக்கையாக இருக்கும்.ஆக, சுழற்சியில் வரும் 2வது எண் ஆள்காட்டி விரலாகும்.(விடையில் சந்தேகம் இருந்தால் விரலில் எண்ணிப் பாருங்கள்!)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !