உள்ளூர் செய்திகள்

கருங்கோழியை தட்டிச்சென்ற ம.பி.

ஒரு பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும் நன்மதிப்பையும் பறைசாற்றும் சின்னமாக, இந்திய அரசின் புவிசார் குறியீடு விளங்குகிறது. இந்நிலையில், 'கடக்நாத்' என்று அழைக்கப்படும் கருங்கோழிக்கு 2012-ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கேட்டு மத்தியப் பிரதேச மாநிலம் விண்ணப்பித்தது. சத்தீஸ்கர் மாநிலமும் கருங்கோழி புவிசார் குறியீட்டுக்குப் போட்டி போட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கருங்கோழியின் இறைச்சி அதிக ருசியானது, சத்தானது. கருங்கோழியின் விலை அதிகம் என்றாலும், மக்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதன் புவிசார் குறியீட்டுக்கான போட்டியில், மத்தியப் பிரதேச மாநிலம் வென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !