ஐ.நா.,வில் அன்னை தெரசா கண்காட்சி
அன்னை தெரசாவின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா. தலைமையகத்தில், சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி, அன்னை தெரசாவின் நினைவு நாள். அன்னை தெரசாவின் வாழ்க்கைப் பயணத்தையும், ஆதரவற்றவர்களுக்கு அவர் செய்த மகத்தான சேவைகளையும் விவரித்து, செப்டம்பர் 6 முதல் 9ஆம் தேதிவரை இந்தக் கண்காட்சி நடக்கும்.