உள்ளூர் செய்திகள்

நீட்: நவ,1 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வுகள் 2019 மே 5-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிவு செய்துகொள்வது அவசியம். நவம்பர் 1ஆம் தேதி முதலே ஆன் லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வை இனி, சி.பி.எஸ்.இ. நடத்தாது. மற்ற போட்டித்தேர்வுகளை நடத்தும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு நிறுவனம் நடத்தவுள்ளது. நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தும் ஆலோசனையை ஏற்கெனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கூறி இருந்தது. அப்படி நடத்துவது மாணவர்களுக்கு அதிகச் சுமையாக இருக்குமென என்.டி.ஏ. கருதுவதால், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க அது திட்டமிட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !