நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. கடலூர் மாவட்டத்தில் விளையும் எந்த இரு உணவுப் பொருட்களுக்கு, மத்திய அரசு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது?அ. கடலைமிட்டாய், தேன்குழல்ஆ. முந்திரி, பலாப்பழம் இ. அல்வா, அவல்ஈ. தேன்மிட்டாய், பாதாம்2. ராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்தில், அதிகபட்சமாக எத்தனை கி.மீ. வேகம் வரை ரயில்களை இயக்கலாம் என, மத்திய அரசு நியமித்த உயர்மட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது?அ. 160 கி.மீ. ஆ. 200 கி.மீ.இ. 80 கி.மீ.ஈ. 150 கி.மீ.3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது தேசியப் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள எம்.ஏ.பேபி, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?அ. குஜராத்ஆ. உத்தரப்பிரதேசம்இ. கேரளம்ஈ. சத்தீஸ்கர்4. மகாராஷ்டிராவில், முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள குல்தாபாத் நகரத்தின் பெயர், என்னவாக மாற்றப்பட உள்ளதாக, அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது?அ. சந்திரபூர்ஆ. அமராவதிஇ. தானேஈ. ரத்னாபூர் 5. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏழு வினாடிகளில் இதயப் பாதிப்புகளைக் கண்டறியும் செயலியை உருவாக்கியுள்ள,14 வயது சிறுவன் சித்தார்த் நந்தியாலா, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?அ. ஆந்திரம் ஆ. தமிழ்நாடுஇ. கேரளம்ஈ. தெலங்கானா6. இந்தியத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், சுற்றுலா பயணியர் அதிகம் செல்லும் இடமாக, எது முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது?அ. ராமேஸ்வரம்ஆ. ஊட்டிஇ. மகாபலிபுரம்ஈ. தாஜ்மஹால்7. இந்தியக் கடற்படையின் தாக்குதல் திறன்களை வலுப்படுத்த, பிரான்சிடம் இருந்து ரூ.63,000கோடி மதிப்பில், 26 எண்ணிக்கையில் எந்த ரக கடற்படை போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?அ. தேஜஸ்ஆ. மிராஜ்இ. ரஃபேல்ஈ. அபாச்சி8. மொனாக்கோவில் நடந்த, 'ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடரில், ஒற்றையர் அல்லது இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்ற, உலகின் மூத்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளவர்?அ. சுமித் நாகல்ஆ. போபண்ணா இ. மகேஷ் பூபதிஈ. சானியா மிர்ஸாவிடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. ஈ, 5. அ , 6. ஈ, 7. இ 8. ஆ.