நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. இந்திய விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் எந்த நாட்டின், 'ஸெலேபி ஏவியேஷன்' எனும் நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது?அ. சுவீடன்ஆ. நார்வேஇ. துருக்கி ஈ. நெதர்லாந்து2. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள எந்த நாட்டின் மீது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டு இருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்?அ. சிரியா ஆ. ஸ்பெயின்இ. போலாந்துஈ. உக்ரைன்3. இந்தியாவிலேயே முதன்முறையாக, '3 நானோ மீட்டர்' சிப்கள் வடிவமைக்கும் மையங்களை, 'ரெனேசாஸ் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா' நிறுவனம், எந்த இரு நகரங்களில் அமைத்துள்ளது?அ. சென்னை, மும்பைஆ. ஐதராபாத், சூரத்இ. நொய்டா, பெங்களூரு ஈ. பூனே, அகமதாபாத்4. அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், 2024-2025ஆம் நிதியாண்டிலும், எந்த மாநிலம் முதலிடத்தில் (ரூ.1,01,025 கோடி) தொடர்வதாக, ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது?அ. கர்நாடகம்ஆ. தமிழகம் இ. மகாராஷ்டிரம்ஈ. ராஜஸ்தான்5. ஆண்டுக்கு 100-150 பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் உள்ள புதிய மையம், இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டு உள்ளது?அ. உத்தரப்பிரதேசம்ஆ. ஜார்க்கண்ட்இ. ஹரியாணாஈ. பீகார்6. ட்ரோன் படைகளைத் தடுத்து அழிக்கும் திறன் கொண்ட புதிய ஆயுதத்தை, இந்தியா சமீபத்தில் ஒடிசாவில் சோதனை செய்தது. இந்த ஆயுதத்தின் பெயர் என்ன?அ. திரிசூல் அஸ்திரம்ஆ. பிருத்வி அஸ்திரம்இ. ஆதர்ஷ் அஸ்திரம்ஈ. பார்கவ அஸ்திரம்7. டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ள இந்திய வீரர்?அ. ரவீந்திர ஜடேஜாஆ. சுப்மன் கில்இ. ரோஹித் சர்மாஈ. விராத் கோலி8. இந்திய ராணுவத்தின் கெளரவ, 'லெப்டினன்ட் கர்னல்' ஆக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள தடகள வீரர்?அ. நீரஜ் சோப்ரா ஆ. ஸ்ரீஜேஷ்இ. மனு பாக்கர்ஈ. பி.வி.சிந்துவிடைகள்: 1. இ, 2. அ, 3. இ, 4. ஆ, 5. அ, 6. ஈ, 7. ஈ, 8. அ.