நான்கில் ஒன்று சொல்!
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிராக, எந்த இரு நாடுகள், கிரீன்லாந்தின் நூக் நகரில் துணைத் தூதரங்களைத் திறந்துள்ளன?அ. மெக்சிகோ, பிரேசில்ஆ. கனடா, பிரான்ஸ்இ. அர்ஜென்டினா, ஜெர்மனிஈ. கியூபா, ஜமைக்கா2. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் வசதியை மேம்படுத்தும் நோக்கில், பிணையம் இல்லாத கடன் வரம்பை, ரூ. 10 லட்சத்தில் இருந்து எவ்வளவாக உயர்த்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது?அ. ரூ.15 லட்சம்ஆ. ரூ. 25 லட்சம்இ. ரூ.20 லட்சம்ஈ. ரூ. 25 லட்சம்3. நாட்டின் எல்லையோர பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், எந்த பிரமாண்ட சுரங்க ரயில் பாதை திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது?அ. ஜல்னாஆ. ரங்கியாஇ. சிவக்ஈ. சிலிகுரி4. உத்தரபிரதேசத்தில் நடந்த தேசிய யூத் ஜூனியர், சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இரு பிரிவுகளில் மொத்தம், 302 கிலோ தூக்கி, புதிய தேசிய சாதனைப் படைத்து தங்கம் வென்ற தமிழக வீரர்?அ. முத்துப்பாண்டி ராஜாஆ. ராஜகோபாலன்இ. முத்துவேல் ராஜாஈ. இளையராஜா5. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார மாநகராட்சியாகக் கருதப்படும் எதன் மேயர் பதவிக்கு, பாரதிய ஜனதா கெளன்சிலர் ரிது தாவ்டே போட்டியிடுகிறார்?அ. மும்பைஆ. சென்னைஇ. பெங்களூரூஈ. கொல்கட்டா6. இந்தியா முழுவதும், 83,000 பள்ளிகளில் படிக்கும் எத்தனை மாணவர்களுக்கு, பயோமெட்ரிக் விவரங்களை வெற்றிகரமாகப் புதுப்பித்து, யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சாதனைப் படைத்துள்ளது?அ. 50 லட்சம்ஆ. 1 கோடிஇ. 1.5 கோடிஈ. 2 கோடிவிடைகள்: 1. ஆ, 2. இ, 3. ஈ, 4.அ 5. அ, 6. ஆ, .